சினிமா

ரஜினிக்கு காய்ச்சலா? - பி.ஆர்.ஓ. விளக்கம்

22nd Nov 2020 03:56 PM

ADVERTISEMENT

நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து பரவும் தகவல் உண்மையில்லை என அவரது பி.ஆர்.ஓ. ரியாஸ் தெரிவித்துள்ளார். 

நடிகர் ரஜினிகாந்துக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், பண்ணை வீட்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில், அவரது பிஆர்ஓ ரியாஸ் முகமது ரஜினியின் உடல்நிலை தொடர்பாக விளக்கமளித்துள்ளார். 

ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து பரவும் தகவல் உண்மையில்லை என்று கூறிய அவர்,  ரஜினி நலமுடன் இருப்பதாகவும் அவரது உடல்நிலை குறித்து பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் விளக்கம் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

Tags : Rajinikanth
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT