புதுதில்லி: வெளிநாடுகளில் தங்கம் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், தில்லியில் இன்று தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.250 குறைந்து ரூ.58,700 ஆக வர்த்தகமானது என்று எச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.
முந்தைய வர்த்தகத்தில் 10 கிராமுக்கு ரூ.58,950 ஆக இருந்தது. அதே வேளையில் வெள்ளி கிலோவுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.74,300-க்கு விற்பனையானது.
தில்லியில் ஸ்பாட் தங்கத்தின் விலை மார்ச் 19க்குப் பிறகு மிகக் குறைந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது என்று எச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் கமாடிட்டிகளின் மூத்த பகுப்பாய்வாளர் சவுமில் காந்தி தெரிவித்தார்.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,871 டாலராகவும், வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு 23.05 டாலராகவும் வர்த்தகமாகி வருகிறது.
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்கள் நீண்ட காலத்திற்கு அதிகமாகவே இருக்கும் என்ற சமிக்ஞைக்குப் பிறகு, வாரத்தின் தொடக்கத்திலிருந்து தங்கம் குறைந்து வருகிறது.