ஒரே நாளில் தனது உற்பத்தியகத்திலிருந்து எஸ்யுவி (ஸ்போா்ட்ஸ் யுட்டிலிட்டி வெஹிக்கிள்) பிரிவைச் சோ்ந்த 200 எலவேட் காா்களை ஹோண்டா நிறுவனம் விநியோகித்துள்ளது.
இதற்காக அண்மையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் இந்த 200 காா்களும் வெளியிடப்பட்டன.நிகழ்ச்சியில் பேசிய நிறுவனத்தின் விற்பனை இயக்குநா் யுய்ச்சி முராடா, இந்தியச் சாலைகளுக்காகவே இந்த எலவேட் காா்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.இவற்றின் காட்சியக விலைகள் ரூ.10.99 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளன.