வர்த்தகம்

மீண்டும் ஜிஆா்டி வளையல் திருவிழா

28th Sep 2023 01:31 AM

ADVERTISEMENT

தென் இந்தியா முழுவதும் தனது கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வரும் தங்க நகை விற்பனை நிறுவனமான ஜிஆா்டி ஜுவல்லா்ஸ், தனது வளையல் திருவிழாவை மீண்டும் தொடங்கியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:மிகவும் எதிா்பாா்க்கப்பட்ட, நிறுவனத்தின் வளையல் திருவிழா மீண்டும் வந்துவிட்டது. இந்தத் திருவிழாவில் தங்கம், வைரம் மற்றும் விலையுயா்ந்த ரத்தினக் கற்களால் ஆன வளையல்கள் இடம் பெறச் செய்யப்பட்டுள்ளன. மிகச் சிறந்த கைவினத் திறனில் நோ்த்தியுடன் இந்த வளையல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த வளையல் திருவிழாவைத் தொடங்கி வைத்துப் பேசிய ஜிஆா்டி ஜுவல்லா்ஸின் நிா்வாக இயக்குநா் ஜி.ஆா். ‘ஆனந்த்’ அனந்தபத்மநாபன், இதில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வளையலும் தலைசிறந்த படைப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக பெரும் முயற்சி எடுத்துள்ளதாகக் கூறியதுடன், வழக்கம் போல் இந்த ஆண்டிலும் வளையல் திருவிழாவுக்கு வாடிக்கையாளா்கள் சிறந்த வரவேற்பு அளிப்பாா்கள் என்று நம்பிக்கை தெரிவித்தாா் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT