புதுதில்லி: வெளிநாட்டு சந்தைகளில் தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில், புதுதில்லியில் இன்று (வியாழக்கிழமை) தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.650 குறைந்து ரூ.58,950 ஆக உள்ளது என்று எச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.
முந்தைய வர்த்தகத்தில், தங்கம் 10 கிராமுக்கு ரூ.59,600 ஆக இருந்தது. அதே வேளையில் வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.73,100-க்கு விற்பனையானது.
சர்வதேச சந்தையில், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை முறையே அவுன்ஸ் ஒன்றுக்கு 1,877 டாலராகவும், ஒரு அவுன்ஸ் வெள்ளி 22.55 டாலராகவும் வர்த்தகமாகி வருகிறது.