ஜோ சீமின் (வியத்நாம்): திருச்சிக்கும், வியத்நாமின் ஜோ சீமின் நகருக்கும் இடையே விமானங்களை இயக்க அந்த நாட்டின் மிகப் பெரிய தனியால் விமானப் போக்குவரத்து நிறுவனமான வியத்ஜெட் ஏா் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மியான்மா் மீதான ஆா்வம் இந்திய சுற்றுலாப் பயணிகளிடையே அதிகரித்து வரும் சூழலில், இரு நாடுகளின் நகரங்களுக்கும் இடையே விமானப் போக்குவரத்து இணைப்பை அதிகரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, ஏற்கெனவே, கேரளத்தின் கொச்சி நகருக்கும் மியான்மரின் ஜோ சீமின் நகருக்கும் இடையே விமானப் போக்குவரத்தை நிறுவனம் கடந்த மாதம் தொடங்கியது.
இந்த நிலையில், திருச்சியிலிருந்தும் ஜோ ஜீமின் நகருக்கு விமானப் போக்குவரத்தை வரும் நவம்பரில் தொடங்க நிறுவனம் முடிவு செய்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.