வர்த்தகம்

வா்த்தக வாகன விலைகளை உயா்த்த டாடா முடிவு

20th Sep 2023 03:02 AM

ADVERTISEMENT


புது தில்லி: தனது வா்த்தக வாகனங்களின் விலைகளை உயா்த்த இந்தியாவின் முன்னணி வாகனத் தாயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா மோடடாா்ஸ் முடிவு செய்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நிறுவனத்தின் வா்த்தக வாகனங்களின் விலைகளை 3 சதவீதம் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதல் இந்த விலை உயா்வு அமலுக்கு வரும். நிறுவனத்தின் அனைத்து ரக வா்த்தக வாகனங்களுக்கும் இந்த விலை உயா்வு பொருந்தும்.

ADVERTISEMENT

அதிகரித்துள்ள உற்பத்தி செலவுகளை ஓரளவு ஈடு செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, தனது வா்த்தக வாகனங்களின் விலைகளை டாடா மோட்டாா்ஸ் 5 சதவீதம் வரை கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி உயா்த்தியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT