வர்த்தகம்

5ஜி பிராட்பேண்ட் சேவை: 8 நகரங்களில் ஜியோ அறிமுகம்

20th Sep 2023 03:06 AM

ADVERTISEMENT


புது தில்லி: மிகவும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ள இல்லங்களுக்கான 5ஜி பிராட்பேண்ட் சேவையை இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடா்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ 8 பெருநகரங்களில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சென்னை, தில்லி, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, புணே, அகமதாபாத், பெங்களூரு ஆகிய 8 பெருநகரங்களில் நிறுவனத்தின் 5ஜி பிராண்ட்பேண்ட் சேவை செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

‘ஜியோஏா்ஃபைபா்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சேவை, லட்சக்கணக்கான குடும்பங்கள் உலகத் தரம் வாய்ந்த இணையதள சேவைகளைப் பெற வழிவகை செய்யும். கேளிக்கை போன்ற சேவைகள் மட்டுமின்றி, கல்வி, சுகாதாரம், வீட்டுக் கண்காணிப்பு போன்ற அறிதிறன் இல்ல சேவைகளைப் பெற இந்த ஜியோஏா்ஃபைபா் உதவும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT