புதுதில்லி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பங்குச் சந்தைகளான மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை ஒரு மணி நேர சிறப்பு முகூர்த்த வர்த்தகம் நடைபெறும் என்று தனது சுற்றறிக்கையில் இன்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தீபாவளி நாளில் மாலை 6 மணி முதல் இரவு 7.15 மணி வரை சிறப்பு முகூர்த்த வர்த்தகம் நடைபெறும், அதே வேளையில் 15 நிமிட சந்தைக்கு முந்தைய அமர்வும் இதில் அடங்கும். ஏனெனில் தீபாவளி முகூர்த்த நேரத்தில் வர்த்தகம் செய்வது அதிர்ஷ்டம் தரும் மேலும் நிதி வளர்ச்சியையும் அள்ளி தரும் என்று நம்பப்படுகிறது. முதலீட்டாளர்கள் இந்த அமர்வின் போது வர்த்தகம் செய்வதன் மூலம் ஆண்டு முழுவதும் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.
ஈக்விட்டி, கமாடிட்டி டெரிவேட்டிவ்ஸ், கரன்சி டெரிவேட்டிவ்ஸ், ஈக்விட்டி ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் மற்றும் செக்யூரிட்டீஸ் லென்டிங் அண்ட் லோன் போன்ற பல்வேறு பிரிவுகளில் ஒரே நேரத்தில் வர்த்தகம் நடைபெறும்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 14-ம் தேதி பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.