புது தில்லி: கடந்த ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் மின் உற்பத்திக்காக அரசுக்குச் சொந்தமான கோல் இந்தியா விநியோகித்த நிலக்கரியின் அளவு 29.48 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் மின் உற்பத்திக்காக 29.48 கோடி நிலக்கரியை நிறுவனம் விநியோகித்துள்ளது.
கடந்த 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 3.4 சதவீதம் அதிகமாகும். அப்போது மின்சாரத் துறைக்கு நிறுவனம் விநியோகித்த நிலக்கரியின் அளவு 29.30 கோடி டன்னாக இருந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.