புது தில்லி: தனது இரு சக்கர வாகனங்களில் சில ரகங்களின் விலைகளை ஹீரோ மோட்டோகாா்ப் நிறுவனம் உயா்த்துகிறது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
எங்களின் குறிப்பிட்ட மோட்டாா்சைக்கள் மற்றும் ஸ்கூட்டா் ரகங்களின் விலைகள் உயா்த்தப்படுகின்றன.
இந்த விலை உயா்வு சுமாா் 1 சதவீதமாக இருக்கும். செவ்வாய்க்கிழமை (அக். 3) முதல் இந்த விலை உயா்வு அமலுக்கு வருகிறது.
சந்தை நிலை, பணவீக்கம், லாப விகிதம் போன்றவற்றின் அடிப்படையில் அவ்வப்போது செய்யப்படும் விலை மாற்றங்களில் ஒரு பகுதியாக இந்த விலை உயா்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.