வர்த்தகம்

சென்செக்ஸ் மேலும் 123 புள்ளிகள் உயர்வு

31st May 2023 03:32 AM

ADVERTISEMENT

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தை நேர்மறையாக முடிவடைந்தது.
 இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 123 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 35.20 புள்ளிகள் (0.19 சதவீதம்) உயர்ந்து 18,633.85-இல்
 நிலைபெற்றது. இதைத் தொடர்ந்து, பங்குச்சந்தை தொடர்ந்து நான்காவது நாளாக நேர்மறையாக
 முடிந்துள்ளது.
 ஆசிய சந்தைகளில் வர்த்தகம் நேர்மறையாக இருந்தது. மேலும், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் உள்நாட்டுச் சந்தையில் தொடர்ந்து பங்குகளை வாங்குவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை நான்காவது நாளாக நேர்மறையாக முடிவடைந்தது. வங்கி, நிதிநிறுவனங்கள், ஐடி, நுகர்பொருள் உற்பத்தி நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவு வரவேற்பு இருந்தது. அதே சமயம் ஆட்டோ, ரியால்ட்டி, பார்மா, ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகள் விற்பனையை எதிர்கொண்டன என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 சந்தை மதிப்பு உயர்வு: சந்தை மூலதன மதிப்பு ரூ.9,000 கோடி உயர்ந்து ரூ.283.89 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள்
 (எஃப்ஐஐ) கடந்த திங்கள்கிழமை ரூ.1,758.16 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
 சென்செக்ஸ் முன்னேற்றம்:
 சென்செக்ஸ் காலையில் 6.53 புள்ளிகள் குறைந்து 62,8839.85-இல் தொடங்கி 62,737.40 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 63,036.12 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 122.75 புள்ளிகள் கூடுதலுடன் 62,969.13-இல் முடிவடைந்தது.
 18 பங்குகள் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் 12 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும், 18 பங்குகள் விலையுயர்ந்த பட்டியலிலும் இருந்தன. இதே போன்று, தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 953 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,084 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 50 முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 22 பங்குகள்ஆதாயம் பெற்றன. 26 பங்குகள் மட்டுமே வீழ்ச்சியை சந்தித்தன.
 ஏற்றம் பெற்ற பங்குகள்
 ஐடிசி 2.31%
 பஜாஜ் ஃபின் சர்வ் 1.08%
 கோட்டக் பேங்க் 1.06%
 பஜாஜ் ஃபைனான்ஸ் 1.02%
 ஆக்ஸிஸ் பேங்க் 0.90%
 ஹெச்சிஎல் டெக் 0.84%
 சரிவைக் கண்ட பங்குகள்
 டெக் மஹிந்திரா 1.27%
 டாடா ஸ்டீல் 1.15%
 சன்பார்மா 0.92%
 நெஸ்லே 0.68%
 எல் அண்ட் டி 0.61%
 டாடா மோட்டார்ஸ் 0.47%
 

ADVERTISEMENT
ADVERTISEMENT