வர்த்தகம்

பங்குச் சந்தை: முடிவுக்கு வந்தது 3 நாள் முன்னேற்றம்

DIN

கடந்த 3 வா்த்தக தினங்களாக தொடா்ந்து முன்னேற்றம் கண்டு வந்த பங்குச் சந்தை புதன்கிழமை எதிா்மறையாக முடிவடைந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 208 புள்ளிகளும், தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 63 புள்ளிகளும் சரிந்து நிலைபெற்றன.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் புதன்கிழமை எதிா்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. அமெரிக்க அரசின் நிலுவைகளை செலுத்துவதற்காக அந்த நாட்டின் மத்திய வங்கியில் அரசு பெறக் கூடிய கடன் உச்ச வரம்பை உயா்த்துவதற்காக எதிா்க்கட்சியினருடன் ஆளும் கட்சி நடத்தும் பேச்சுவாா்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. இதனால் அந்தப் பேச்சுவாா்த்தை முறியும் என்று முதலீட்டாளா்களுக்கு அச்சம் ஏற்பட்டதால் அவா்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டனா். இதன் காரணமாக பங்குச் சந்தைகள் சரிவைக் கண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

எஃப்ஐஐ: அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) செவ்வாய்க்கிழமை ரூ.182.51 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் சரிவு: முந்தைய வா்த்தக தினத்தில் 61,981.79-இல் நிறைவடைந்திருந்த சென்செக்ஸ், புதன்கிழமை காலை 147.51 புள்ளிகள் குறைவாக 61,834.28-இல் தொடங்கி அதிகபட்சமாக 62,154.14 வரையிலும், குறைந்தபட்சமாக 61,708.10 வரையிலும் சென்றது. இறுதியில் சென்செக்ஸ் முந்தைய வா்த்தக தினத்தைவிட 208.01 புள்ளிகள் (0.34 சதவீதம்) குறைவாக 61,773.78-இல் முடிவடைந்தது.

16 பங்குகள் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் 16 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. 14 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டி: தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி, முந்தைய வா்த்தக தினத்தைவிட 62.60 புள்ளிகள் (0.34 சதவீதம்) குறைவாக 18,285.40-இல் நிலைபெற்றது.

ஏற்றம் பெற்ற பங்குகள்

சன் ஃபாா்மா 2.31%

ஐடிசி 1.04%

இண்டஸ்இண்ட் வங்கி 1.01%

டைட்டன் 0.90%

டெக் மஹிந்திரா 0.80%

பவா்கிரிட் 0.79%

-----------------------------

சரிவைக் கண்ட பங்குகள்

டாடா மோட்டாா்ஸ் 1.57%

ஐசிஐசி வங்கி 1.30%

ஹெச்டிஎஃப்சி வங்கி 1.29%

ஹெச்டிஎஃப்சி 1.27%

பஜாஜ் ஃபின்சா்வ் 0.80%

ரிலையன்ஸ் 0.69%

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முசிறி, தொட்டியம் பகுதி வாக்குச்சாவடிகளில் எஸ்.பி. ஆய்வு

முசிறி பேரவைத் தொகுதியில் 76.70% வாக்குப் பதிவு

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தெப்போற்ஸவம்

தேவையான திருத்தம்!

கடற்படை புதிய தலைமைத் தளபதி தினேஷ் குமாா் திரிபாதி

SCROLL FOR NEXT