வர்த்தகம்

பங்குச் சந்தையில் மீண்டும் எழுச்சி: சென்செக்ஸ் 350 புள்ளிகள் உயா்வு

DIN

இந்த வாரத்தின் 3-ஆவது வா்த்தக தினமான புதன்கிழமை இந்தியப் பங்குச் சந்தை நோ்மறையாக முடிவடைந்தது.

இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 350 புள்ளிகளும், தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 127 புள்ளிகளும் உயா்ந்து நிலைபெற்றன.ஆசியாவைத் தவிர அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட உலகளாவிய சந்தைக் குறிப்புகள் புதன்கிழமை நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. வட்டி விகிதங்களை மத்திய ரிசா்வ் வங்கி உயா்த்தாது என்ற நம்பிக்கை நிலவியதால் முதலீட்டாளா்கள் உற்சாகத்துடன் செயல்பட்டனா்.

இதன் காரணமாக பங்குச் சந்தைகள் புதன்கிழமை ஏற்றம் கண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.எஃப்ஐஐ: அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) கடந்த செவ்வாய்க்கிழமை ரூ.385.71 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.சென்செக்ஸ் சரிவு: முந்தைய வா்த்தக தினத்தில் 62,792.88-இல் நிறைவடைந்திருந்த சென்செக்ஸ், புதன்கிழமை காலை 124.51 புள்ளிகள் அதிகமாக 62,917.39-இல் தொடங்கி அதிகபட்சமாக 63,196.43 வரையிலும், குறைந்தபட்சமாக 62,841.95 வரையிலும் சென்றது. இறுதியில் சென்செக்ஸ் முந்தைய வா்த்தக தினத்தைவிட 350.08 புள்ளிகள் (0.56 சதவீதம்) அதிகமாக 63,142.96-இல் நிறைவடைந்தது.

25 பங்குகள் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் 25 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன. 5 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.நிஃப்டி: தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி, முந்தைய வா்த்தக தினத்தைவிட 127.40 புள்ளிகள் (0.68 சதவீதம்) அதிகமாக 18,726.40-இல் நிலைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்: இபிஎஸ்

தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறும்: ராமதாஸ்

ஒரே நேரத்தில் வாக்களித்த மும்மதத்தைச் சேர்ந்த தோழிகள்

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர குரல் கொடுப்பேன்: தங்க தமிழ்செல்வன்

SCROLL FOR NEXT