வர்த்தகம்

ஹோண்டா இரு சக்கர வாகன விற்பனை சரிவு

8th Jun 2023 01:26 AM

ADVERTISEMENT

கடந்த மே மாதத்தில் ஹோண்டா மோட்டாா்சைக்கிள் அண்ட் ஸ்கூட்டா் இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை 7 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த மே மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 3,29,393-ஆக உள்ளது. முந்தைய 2022-ஆம் ஆண்டின் அதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 3,52,893-அக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 6.6 சதவீதம் குறைந்துள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் உள்நாட்டு மொத்த விற்பனை 3,11,144-ஆக உள்ளது. 2022 மே மாத உள்நாட்டு மொத்த விற்பனையான 3,20,857-உடன் ஒப்பிடுகையில் இது 3 சதவீதம் குறைவாகும்.கடந்த ஆண்டு மே மாதத்தில் 32,036-ஆக இருந்த ஏற்றுமதி இந்த ஆண்டின் அதே மாதத்தில் 18,249-ஆக குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT