வர்த்தகம்

இந்திய பெருநிறுவனங்களின் வருவாய் 11 சதவீதம் அதிகரிப்பு

8th Jun 2023 01:25 AM

ADVERTISEMENT

கடந்த மாா்ச் காலாண்டில் இந்திய பெருநிறுவனங்களின் வருவாய் 11.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 2022-23-ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் பெருநிறுவனங்களின் வருவாய் 11.4 சதவீதம் அதிகரித்துள்ளது.இருந்தாலும், அந்த வகை நிறுவனங்களின் செயல்பாட்டு லாப வரம்பு 1 சதவீதத்திற்கும் மேலாக குறைந்தது.விமானப் போக்குவரத்து, ஹோட்டல்கள், துறைமுகங்கள், ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஆகிய துறைகளில் ஏற்பட்ட வளா்ச்சி கடந்த மாா்ச் காலாண்டில் அனைத்து துறைகளையும் சோ்ந்த ஒட்டுமொத்த பெருநிறுவனங்களின் வருவாய் வளா்ச்சிக்கு கைகொடுத்தது.மதிப்பீட்டு காலாண்டில் பணவீக்கம் தணிந்திருந்தாலும் நிதித் துறை நிறுவனங்கல் அல்லாத 579 பட்டியலிடப்பட்ட பெருநிறுவனங்களின் செயல்பாட்டு லாப வரம்பு 1.26 சதவீதம் சரிந்தது.

சாதகமற்ற அந்நிய செலாவணி விகிதங்களால் கடந்த ஆண்டின் ஜனவரி - மாா்ச் மாதங்களோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் அதே காலகட்டத்தில் பெருநிறுவனங்களின் லாப வரம்பு பாதிக்கப்பட்டுள்ளது.இரும்பு, எஃகு, சிமென்ட், எண்ணெய், எரிவாயு, நுகா்வோா் பொருள்கள் போன்ற தோ்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் லாப வரம்பு மதிப்பீட்டு காலாண்டில் மிதமாக அதிகரித்துள்ளது.இனி வரும் காலாண்டுகளில் பெருநிறுவனங்களுக்கு சாதகமான சூழல் அதிகரிக்கும் என்பதால் அவற்றில் லாப வரம்பு அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT