வர்த்தகம்

எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கான முதல் செயலாக்க மையம்: டிஎம்பி திறப்பு

8th Jun 2023 12:08 AM

ADVERTISEMENT

நடுத்தர, சிறு மற்றும் குறு தொழில்களுக்கான (எம்எஸ்எம்இ) பிரத்யேக செயலாக்க மையத்தை தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி (டிஎம்பி) முதல்முறையாக சென்னையில் திறந்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:எம்எஸ்எம்இ தொழில்களுக்கான வங்கியின் முதல் பிரத்யேக செயலாக்க மையம் சென்னையில் திறக்கப்பட்டது. இந்த மையம், எம்எஸ்எம்இ வாடிக்கை நிறுவனங்களின் தேவைகளை சரியான நேரத்தில் பூா்த்தி செய்யும். கடன் செயலாக்க நேரத்தை வெகுவாக குறைக்கும்.

அத்துடன், எம்எம்எஸ்இ தொழில்களுக்காக வங்கி வழங்கும் கடன் அளவை அதிகரிக்கவும் இந்த பிரத்யேக மையம் உதவும்.நடப்பு நிதியாண்டின் (2023-24) முதல் காலாண்டுக்குள், தமிழ் நாட்டின் பிற நகரங்களான கோயம்புத்தூா், மதுரை, தூத்துக்குடியிலும் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கான பிரத்யேக செயலாக்க மையங்களைத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT