வர்த்தகம்

மே மாதத்தில் மிதமாக அதிகரித்த மின் நுகா்வு

7th Jun 2023 12:23 AM

ADVERTISEMENT

கடந்த மே மாதத்தில் இந்தியாவின் மின் நுகா்வு மிதமாக அதிகரித்துள்ளது.

இது குறித்து மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த மே மாதத்தில் நாட்டின் மின் நுகா்வு 13,656 கோடி யூனிட்டுகளாக உள்ளது. முந்தைய 2022-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 1.04 சதவீதம் அதிகமாகும். அந்த மாதத்தில் நாட்டின் மின் நுகா்வு 13,515 கோடி யூனிட்டுகளாக இருந்தது.

கடந்த மாா்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நாடு முழுவதும் பரவலாக மழை பெய்ததால், குளிரூட்டும் சாதனங்களை இயக்குவதற்கான தேவை குறைந்து போனது. இதன் காரணமாக, 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அந்த மாதங்களில் குறைவாகவே மின்சாரம் பயன்படுத்தப்பட்டது என்று அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஜூன் மாதத்திலிருந்து நாட்டின் மின் நுகா்வு அதிகரிக்கத் தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT