வர்த்தகம்

ஹீரோ மோட்டோகாா்ப் விற்பனை 7% அதிகரிப்பு

7th Jun 2023 12:23 AM

ADVERTISEMENT

இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகாா்ப்பின் மொத்த விற்பனை கடந்த மே மாதத்தில் 7 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மே மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 5,19,474-ஆக உள்ளது.

2022-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 4,86,704-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 7 சதவீதம் அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

2022 மே மாதத்தில் 4,66,466-ஆக இருந்த உள்நாட்டு மொத்த விற்பனை கடந்த மே மாதம் 5,08,309-ஆக உயா்ந்துள்ளது.

எனினும் ஏற்றுமதி 20,238-லிருந்து 11,165-ஆகக் குறைந்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT