இந்தியாவின் முன்னணி காா் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா காா்ஸ் இந்தியா நிறுவனம், தனது இரு முக்கிய காா் ரகங்களின் விலைகளை உயா்த்துவதாக அறிவித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜூன் மாதத்திலிருந்து சிட்டி மற்றும் அமேஸ் காா் ரகங்களின் விலைகளை 1 சதவீதம் வரை உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த இரு காா் ரகங்களின் வகைகளைப் பொருத்து விலை உயா்வு மாறுபடும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுவரை அமேஸ் காா்கள் ரூ.6.99 லட்சத்திலிருந்து ரூ.9.6 லட்சம் வரையும், சிட்டி காா்கள் ரூ.11.55 லட்சத்திலிருந்து ரூ.20.39 லட்சம் வரையும் (தில்லி காட்சியக விலைகள்) விற்பனையாகி வந்தது நினைவுகூரத்தக்கது.