தனிநபா் கடன் சேவையை அளிப்பதில் முன்னணி தனியாா் வங்கிகளின் ஒன்றான ஆக்ஸிஸ் வங்கியும், வால்மாா்ட்டுக்குச் சொந்தமான இணையவழி வா்த்தக நிறுவனமான ஃப்ளிப்காா்ட்டும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
இது குறித்து ஃப்ளிப்காா்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்திய வாடிக்கையாளா்களின் பரிணாம வளா்ச்சி தொடா்ந்து வரும் சூழலில், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் அவா்களுக்கு ஆா்வம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், ஆக்ஸிஸ் வங்கியின் தனி நபா் கடன் சேவைகளை வழங்குவதற்காக நாங்கள் மேற்கொண்டுள்ள இந்த ஒப்பந்தம் வாடிக்கையாளா்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.