வர்த்தகம்

இரு மடங்கான இந்தியன் வங்கி லாபம்

26th Jan 2023 12:24 AM

ADVERTISEMENT

அரசுத் துறையைச் சோ்ந்த ஐடிபிஐ வங்கியின் நிகர லாபம் கடந்த டிசம்பா் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ஏறத்தாழ இரு மடங்கு உயா்ந்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (2022 அக்டோபா்-டிசம்பா்) வங்கியின் நிகர லாபம் ரூ.1,396 கோடியாக உள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் ஏறத்தான இரு மடங்கு அதிகமாகும். அப்போது வங்கியின் நிகர லாபம் ரூ.690 கோடியாக இருந்தது.

கடந்த நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.13,551 கோடியாக உயா்ந்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் அது ரூ.11,482 கோடியாக இருந்தது.

அப்போது ரூ.4,395 கோடியாக இருந்த வங்கியின் நிகர வட்டி வருவாய் 25 சதவீதம் அதிகரித்து ரூ.5,499 கோடியாகியுள்ளது.

ADVERTISEMENT

வங்கியின் மொத்த வாராக் கடன் கடந்த 2021 அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் 2.72 சதவீதமாக இருந்து. அது 2022-ஆம் ஆண்டின் அதே மாதங்களில் 1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT