வர்த்தகம்

இன்ஃபோசிஸ் நிகர லாபம் 13% அதிகரிப்பு!

12th Jan 2023 09:23 PM

ADVERTISEMENT

 

புதுதில்லி:  2022 டிசம்பரில் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் தொழில்நுட்ப சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் 13.4% உயர்வை பதிவு செய்துள்ளதாக இன்று (ஜனவரி 12) தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.5,809 கோடியில் இருந்து இந்த ஆண்டு ரூ.6,586 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், மார்ச் வரையிலான நிதியாண்டில் 16% முதல் 16.5% வரை வருவாய் வளர்ச்சியை எட்டியுள்ளது. 

ADVERTISEMENT

அன்மையில் இன்ஃபோசிஸ் ஒப்பந்தம் கையெழுத்து ஆனது மூலம் அதன் வருவாய் 3.3 பில்லியனாக டாலராக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT