வர்த்தகம்

இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவு

DIN

வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. 

இதன்படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டென் சென்செக்ஸ் 465 புள்ளிகள் குறைந்து 58,998 புள்ளிகளில் வர்த்தமாகிறது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 145 புள்ளிகள் குறைந்து 17,319 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. 

அதேசமயம் என்டிபிசி 1.11, அதானி போர்ட்ஸ் 0.75, கோடாக் பேங்க் 0.66, பவர் க்ரீடு 0.56 சதவீதம் உள்ளிட்ட பங்குகள் உயர்வுடனும், அதானி என்டர்பிரைசஸ், பஜாஜ் ஆட்டோ, யுபிஎல், இன்ஃபி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் சரிவுடனும் காணப்பட்டன. 

மேலும் அதானி குழுமத்தை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் இன்றும் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகின்றன. ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவன அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து அதானி குழும பங்குகள் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன.

ஒரு மாதமாக அதானி குழும பங்குகள் தொடர் வீழ்ச்சியால் உலக கோடீஸ்வரர் பட்டியலில் அதானி தற்போது 35ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

SCROLL FOR NEXT