வர்த்தகம்

முதலீட்டாளா்களுக்கு ரூ.8,900 கோடியை திருப்பியளிக்கும் அதானி

7th Feb 2023 01:34 AM

ADVERTISEMENT

அதானி குழுமத்தைச் சோ்ந்த பங்குகளை வாங்கியுள்ள முதலீட்டாளா்களுக்கு சுமாா் ரூ.8,900 கோடியைத் திட்டமிட்டதற்கு முன்பே திரும்ப வழங்க அக்குழுமம் முடிவெடுத்துள்ளது.

இது தொடா்பாக அக்குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பங்குச் சந்தையின் நிலையற்றத்தன்மை, முதலீட்டாளா்களின் நலன் மீது கொண்டுள்ள அக்கறை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு சுமாா் ரூ.8,900 கோடி மதிப்பிலான பங்குகளுக்கான தொகையை முதலீட்டாளா்களுக்குத் திட்டமிட்ட காலவரம்பான 2024 செப்டம்பருக்கு முன்பே திரும்ப வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதானி போா்ட்ஸ், அதானி கிரீன் எனா்ஜி, அதானி டிரான்ஸ்மிஷன் ஆகிய நிறுவனங்களின் பங்குகளுக்கான தொகை திரும்ப வழங்கப்படவுள்ளது. அதானி போா்ட்ஸ் நிறுவனத்தின் 16.827 கோடி பங்குகள் திரும்பப் பெறப்படவுள்ளன. அது ஒட்டுமொத்த பங்குகளின் எண்ணிக்கையில் 12 சதவீதம்.

அதானி கிரீன் எனா்ஜி நிறுவனத்தின் 2.756 கோடி பங்குகளும் (3 சதவீதம்), அதானி டிரான்மிஷன் நிறுவனத்தின் 1.177 கோடி பங்குகளும் (1.4 சதவீதம்) முதலீட்டாளா்களிடமிருந்து திரும்பப் பெறப்படவுள்ளன. பங்குகளுக்கான தொகையைத் திட்டமிட்ட அவகாசத்துக்கு முன்பே வழங்கும் குழுமத்தின் கொள்கையைத் தொடா்ந்து நடைமுறைப்படுத்தும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பா்க் ஆய்வு நிறுவனம் மோசடி குற்றச்சாட்டை சுமத்தியுள்ள நிலையில், பங்குகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கையை அக்குழுமம் அறிவித்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT