வர்த்தகம்

இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகம் 

6th Feb 2023 09:49 AM

ADVERTISEMENT

வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. 

இதன்படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டென் சென்செக்ஸ் 321 புள்ளிகள் குறைந்து 60,519 புள்ளிகளில் வர்த்தமாகிறது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 113 புள்ளிகள் குறைந்து 17,740 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. அதேசமயம் அதானி குழும பங்குகள் விலை 8ஆவது நாளாக சரிவை சந்தித்துள்ளது.

இதையும் படிக்க- 'அதானி விவகாரம் பொருளாதாரத்தை பாதிக்காது': மத்திய அமைச்சர்

அதானி என்டர்பிரைசஸ் பங்கு விலை 6.52 சதவீதம் அதாவது, ரூ.103 குறைந்து ரூ.1480ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் அதானி பவர் நிறுவன பங்கு விலை 5 சதவீதம் அதாவது ரூ.9.60 குறைந்து ரூ.182ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் பங்கு விலை 10 சதவீதம் அதாவது ரூ.140 குறைந்து ரூ.1261ஆக வர்த்தகமானது. 

ADVERTISEMENT

அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதை அடுத்து அந்நிறுவன பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT