வர்த்தகம்

ஜனவரியில் விற்பனை வளா்ச்சி: மாருதி சுஸுகி

DIN

இந்தியாவின் மிகப் பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் ஜனவரி மாத மொத்த விற்பனை 12 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஜனவரி மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 1,72,535-ஆக உள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் நிறுவனம் மொத்தம் 1,54,379 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், தற்போது மொத்த விற்பனை 12 சதவீதம் அதிகரித்துள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் மொத்த உள்நாட்டு விற்பனை 1,55,142-ஆக இருந்தது. இது 2022 ஜனவரி மாதத்திய விற்பனையுடன் (1,36,442) ஒப்பிடுகையில் 14 சதவீதம் அதிகமாகும்.

கடந்த ஆண்டு ஜனவரியில் 17,937-ஆக இருந்த நிறுவனத்தின் ஏற்றுமதி, இந்த ஜனவரியில் 17,393-ஆகக் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

SCROLL FOR NEXT