வர்த்தகம்

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிகர லாபம் 51% உயா்வு

DIN

முன்னணி வீட்டுக் கடன் சேவை நிறுவனங்களில் ஒன்றான சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ், கடந்த டிசம்பா் காலாண்டில் 51 சதவீத நிகர லாப உயா்வைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து, சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த டிசம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் நிறுவனம் ரூ. 52.56 கோடியை நிகர லாபமாக பதிவு செய்துள்ளது.

முந்தைய நிதியாண்டின இதே காலாண்டின் அது ரூ.34.90 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், தற்போது நிகர லாபம் 51 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.

மதிப்பீட்டு காலாண்டில், நிறுவனம் விநியோகித்த கடன் மதிப்பும் 51 சதவீதம் அதிகரித்து ரூ.985.90 கோடியாக உள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் அது ரூ.651.84 கோடியாக இருந்தது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

SCROLL FOR NEXT