வர்த்தகம்

பங்குச் சந்தையில் தள்ளாட்டம்: சென்செக்ஸ், நிஃப்டி சிறிதளவு சரிவு

 நமது நிருபர்

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. "கரடி'யின் ஆதிக்கம் தொடர்ந்ததால், 30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 38 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 8.90 புள்ளிகளை (0.05 சதவீதம்) இழந்து 17,0007.40-இல் முடிவடைந்தது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் சாதகமில்லாத நிலையில், உள்நாட்டுச் சந்தை திசை தெரியாமல் தள்ளாடியது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த சில நாள்களாக தொடர்ந்து பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்று வருவதும் முதலீட்டாளர்களிடையே கவலையை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், காலையில் ஏற்றத்துடன் தொடங்கினாலும், பின்னர் பங்குகள் விற்பனையை எதிர்கொண்டன. குறிப்பாக மெட்டல், வங்கி மற்றும் நிதிநிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனைக்கு வந்தன. இதைத் தொடர்ந்து, 5-ஆவது நாளாக சந்தை சரிவைச் சந்தித்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
5-ஆவது நாளாக வீழ்ச்சி: காலையில் 231.30 புள்ளிகள் கூடுதலுடன் 57,376.52-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 57,704.57 வரை சென்றது. பின்னர், 56,950.52 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 37.70 புள்ளிகளை (0.07 சதவீதம்) இழந்து 57,107.52-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில், 17 பங்குகள் ஆதாயம் பெற்றன. 13 பங்குகள் நஷ்டமடைந்த பட்டியலில் வந்தன.
பவர் கிரிட் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள பொதுத்துறை மின் நிறுவனமான பவர் கிரிட் 1.81 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக இண்டஸ் இண்ட் பேங்க், ஹெச்சிஎல் டெக், டாக்டர் ரெட்டி, நெஸ்லே, ஏசியன் பெயின்ட், இன்ஃபோஸிஸ், விப்ரோ, டிசிஎஸ், ரிலையன்ஸ், பார்தி ஏர்டெல், ஐடிசி, ஹிந்துஸ்தான் யுனி லீவர் உள்ளிட்டவை 0.50 முதல் 1.30 சதவீதம் வரை உயர்ந்தன.
டாடா ஸ்டீல் சரிவு: அதே சமயம், பிரபல ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான டாடா ஸ்டீல் 2.25 சதவீதம், டைட்டன் 2.16 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக கோட்டக் பேங்க், எஸ்பிஐ, டெக் மஹிந்திரா, ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், மாருதி, எல் அண்ட் டி உள்ளிட்டவை 0.60 முதல் 1.50 சதவீதம் வரை குறைந்தன.
சந்தை மதிப்பு சிறிதளவு உயர்வு:
சந்தை மூலதன மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.270.16 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த திங்கள்கிழமை ரூ.5,101.30 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ்
பெற்றுள்ளது பங்குச் சந்தை தரவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT