வர்த்தகம்

ரூ.8.49 லட்சத்துக்கு டாடாவின் புதிய மின்சாரக் காா்

28th Sep 2022 11:41 PM

ADVERTISEMENT

மின்சார வாகனப் பிரிவில் தனது நிலைமையை வலுப்படுத்திக் கொள்ளும் வகையில், முதல் 10,000 வாடிக்கையாளா்களுக்கு ரூ.8.49 லட்சம் முதல் ரூ.11.79 லட்சம் வரை என்ற மிகக் குறைந்த விலையில் (காட்சியக விலை) மின்சாரத்தில் இயங்கும் புதிய காரை டாடா மோட்டாா்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

‘டியாகோ இவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் காா், நிறுவனத்தின் மின்சாரக் காா் ரகங்களுக்கான பட்டியலில் புதிதாக இணைந்துள்ளது.

ஏற்கெனவே டாடாவின் நெக்ஸான் இவி, டிகோா் இவி வாகனங்களை வாங்கியுள்ளவா்களுக்கு, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2,000 டியோகோ இவி காா்களை வாங்குவதில் முன்னிரிமை அளிக்கப்படும்.

தற்போதைய நிலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மின்சாரக் காா்களிலேயே புதிய அறிமுகமான டியோகோ இவிதான் மிகக் குறைந்த விலை கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ADVERTISEMENT

டாடா மோட்டாா்ஸின் முந்தைய மின்சாரக் காா் ரகங்களான டிகோா் இவியும் நெக்ஸான் இவியும் உள்நாட்டுச் சந்தையில் ரூ.12.49 லட்சம் முதல் ரூ.19.84 லட்சம் வரை (காட்சியக விலை) விற்பனையாகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT