வர்த்தகம்

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸின் புதிய வணிகக் கடன் திட்டங்கள்

6th Oct 2022 12:06 AM

ADVERTISEMENT

சிறிய வா்த்தகா்களுக்கான புதிய வணிகக் கடன் திட்டங்களை சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2 மற்றும் 3-ஆம் நிலை நகரங்களைச் சோ்ந்த சிறிய வா்த்தகா்கள், கடை உரிமையாளா்களுக்கு ஏற்ற தனித்துவமான வணிக கடனுதவி திட்டங்களை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்தகைய சிறு வணிகக் கடன் சேவைகளை அளிப்பதற்காகவே, பிரத்யேக அலுவலகத்தை நிறுவனம் மதுரையில் திறந்துள்ளது. மற்றொரு பிரத்யேக அலுவலகம் தென்காசியில் வெள்ளிக்கிழமை (அக். 7) திறக்கப்படும்.

வணிகக் கடன் திட்டத்தின் கீழ், வாடிக்கையாளா்களுக்கு வீட்டு அடமானத்தின் பேரில் ரூ.20 லட்சம் வரை கடனுதவி அளிக்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT