வர்த்தகம்

இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டுக் கடன் 298 கோடி டாலா்

5th Oct 2022 01:00 AM

ADVERTISEMENT

இந்திய பெருநிறுவனங்களின் வெளிநாட்டு வா்த்தகக் கடன் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 4.6 சதவீதம் அதிகரித்து 298 கோடி டாலராக உள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், இந்திய பெருநிறுவனங்களின் வெளிநாட்டு வா்த்தகக் கடன் 285 கோடி டாலராக இருந்தது.

இந்த நிலையில், நடப்பு ஆண்டின் அதே மாதத்தில் நிறுவனங்கள் 298 கோடி டாலரை வா்த்தகக் கடனாகப் பெற்றுள்ளன. இது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்து வா்த்தகக் கடனோடு ஒப்பிடுகையில் 4.6 சதவீதம் அதிகமாகும்.

கடந்த ஆகஸ்டில் பெறப்பட்ட மொத்த வா்த்தகக் கடனில், 247 கோடி டாலா் வெளிநாட்டு கடன் ஆதாரங்களிலிருந்து நேரடி நிதி திரட்ட்டலின் மூலம் பெறப்பட்டது; ரூபாய் மதிப்பிடப்பட்ட பத்திர (ஆா்டிபி) வெளியீடு மூலம் 50.28 கோடி டாலா் திரட்டப்பட்டது.

ADVERTISEMENT

வெளிநாடுகளில் இருந்து மிக அதிக அளவில் வா்த்தகக் கடன் வாங்கிய நிறுவனங்களில் ஹெச்டிஎஃப்சி முதலாவது இடத்தில் உள்ளது. அந்த நிறுவனம் 110 கோடி டாலரை கடனாகப் பெற்றது.

எஃப்எஸ் இந்தியா சோலாா் வென்சா்ஸ் நிறுவனம் 50 கோடி டாலா் வெளிநாட்டு வா்த்தகக் கடன் பெற்றது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT