வர்த்தகம்

ட்விட்டரில் எடிட் வசதி வந்துவிட்டது! யாரெல்லாம் உபயோகிக்கலாம்? 

4th Oct 2022 04:43 PM

ADVERTISEMENT

 

பிரபல சமூக வலைவளங்களில் ஒன்றான ட்விட்டர் ‘எடிட்’ வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ஒரு பதிவைப் பதிந்த பின் அதில் பிழை திருத்தும் (எடிட்) வசதி இருக்கிறது. இதன் மூலம், பதிவில் சில மாற்றங்களை செய்துகொள்ளலாம். எடுத்துக்காட்டாக, பதியப்படும் வாக்கியத்தில் பிழைகள் ஏதேனும் நிகழ்ந்தால் அதை பதிவிட்ட பிறகும் திருத்திக் கொள்ளலாம். இது பதிவர்களுக்கு மிகத் தேவையான வசதியாக இருந்தாலும் இதுவரை ட்விட்டரில் இந்த வசதி இல்லை.

ட்விட்டர் நிறுவனம் உண்மையிலேயே அந்த வசதியை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் விரைவில் இந்த வசதி ‘புளூ டிக்’ பயனர்களுக்கு வழங்கப்படும் எனவும்  தெரிவித்திருந்தது. 

ADVERTISEMENT

தற்போது, எடிட் சேவையை கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் உள்ள அதிகார்பூர்வ பயனார்களுக்கு வழங்கியுள்ளது ட்விட்டர் நிறுவனம். விரைவில் அமெரிக்காவிற்கும் இச்சேவை வழங்கப்படவுள்ளது!

 

ADVERTISEMENT
ADVERTISEMENT