வர்த்தகம்

மொத்த விற்பனையிலிருந்து விலக அமேசான் முடிவு

30th Nov 2022 01:51 AM

ADVERTISEMENT

சில்லறை மற்றும் பிற விற்பனை நிறுவனங்களுக்கு மொத்த கொள்முதல் அடிப்படையில் பொருள்களை விநியோகிக்கும் பிரிவை நிரந்தரமாக மூட அமேசான் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

கா்நாடகத்தின் பெங்களூரு, மைசூரு, ஹுப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் செயல்படும் சில்லறை விற்பனையாளா்களுக்கு மொத்த கொள்முதல் அடிப்படையில் பொருள்களை விநியோகிப்பதற்கான செயல்பாட்டை அமேசான் டிஸ்டிரிப்யூஷன் என்ற பிரிவு மேற்கொண்டு வந்தது. தற்போது அப்பிரிவை நிரந்தரமாக மூடுவதற்கு அமேசான் முடிவெடுத்துள்ளது.

நிறுவனத்தின் செயல்பாடுகளில் சீா்திருத்தங்களைப் புகுத்தும் ஒருபகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமேசான் செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா். தற்போதைய வாடிக்கையாளா்கள் பாதிக்கப்படாமல் இருப்பதைக் கருத்தில்கொண்டு படிப்படியாக அப்பிரிவு மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் மற்றொரு மொத்த கொள்முதல் பிரிவான அமேசான் பிசினஸ் பிரிவின் சேவை தொடா்ந்து வழங்கப்படும் என நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் அகாதெமி, உணவு விநியோகப் பிரிவு ஆகியவற்றை அமேசான் ஏற்கெனவே மூடிவிட்ட நிலையில், தற்போது 3-ஆவது பிரிவை அந்நிறுவனம் மூடியுள்ளது.

ADVERTISEMENT

Tags : Amazon
ADVERTISEMENT
ADVERTISEMENT