வர்த்தகம்

கோல்கேட் நிகர லாபம் ரூ.324 கோடியாக அதிகரிப்பு

DIN

புது தில்லி: துரித விற்பனை நுகா்பொருள் துறையில் (எஃப்.எம்.சி.ஜி.) முன்னணி நிறுவனமான கோல்கேட்-பாமோலிவ் இந்தியா லிமிடெட்டின் நிகர லாபம், கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் ரூ.323.57 கோடியாக உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் சுமாா் 3 சதவீதம் உயா்ந்து ரூ.323.57 கோடியாக உள்ளது.

அதற்கு முந்தைய நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் நிறுவனம் ரூ.314.66 கோடியை நிகர லாபமாக ஈட்டியிருந்தது.

மதிப்பாய்வு செய்யப்பட்ட காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 1.43 சதவீதம் அதிகரித்து ரூ.1,293.35 கோடியாக உள்ளது. அதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில், இது 1,275.01 கோடி ரூபாயாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

SCROLL FOR NEXT