வர்த்தகம்

மின்சாரத்தில் இயங்கும் ஐ4 ரகக் காா்: பிஎம்டபிள்யூ அறிமுகம்

27th May 2022 03:04 AM

ADVERTISEMENT

 

குருகிராம்: ஜொ்மனி சொகுசுக் காா் தயாரிப்பாளரான பிஎம்டபுள்யூ, முற்றிலும் மின்சாரத்தில் இயங்கக் கூடிய ஐ4 ரகக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஐ4 ரகக் காரின் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கக்கூடிய வகை, இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் மின்சார வாகனப் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யும் நிறுவன திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தக் காா் அறிமுகப்படுத்தப்படுகிறது.

ADVERTISEMENT

மின்சார ஐ4 ரகக் காா்களின் அறிமுக விலை ரூ.69.9 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் 5-ஆவது தலைமுறை ‘இ-டிரைவ்’ தொழில்நுட்பத்தைக் கொண்டு இயங்கும் இந்தக் காா், 5.7 விநாடிகளில் மணிக்கு 100 கி.மீ. வேகத்தை அடையக் கூடியது. மணிக்கு 80.7 கிலோவாட் சக்தி கொண்ட பேட்டரியில் இந்தக் காா் இயங்குகிறது. 340 குதிரை சக்தியை மின்சார ஐ4 காா்கள் வெளிப்படுத்தும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT