வர்த்தகம்

பிஇஎல் விற்றுமுதல் ரூ. 15,044 கோடியாக உயர்வு

26th May 2022 03:34 AM

ADVERTISEMENT

 


பெங்களூரு:  பாதுகாப்பு பொதுத் துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் (பிஇஎல்) 2021}22}ஆம் ஆண்டுக்கான விற்றுமுதல் ரூ. 15,044 கோடியாக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆனந்த் ராமலிங்கம் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
2021}22}ஆம் ஆண்டில் பிஇஎல். நிறுவனத்தின் விற்றுமுதல் ரூ.15,044 கோடியாக உள்ளது. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 8.87 சதவீதம் உயர்வாகும். அதேபோல, வரிக்கு முந்தைய லாபம் ரூ. 3,158 கோடியாக இருந்தது. இது 7.60 சதவீத வளர்ச்சியாகும். வரிக்கு பிந்தைய லாபம் ரூ. 2,349 கோடியாக இருந்தது. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 13.73 சதவீத வளர்ச்சியாகும் என்றார் அவர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT