வர்த்தகம்

புத்தம் புதிய டைகா் 1200 பைக்குகள்: அறிமுகப்படுத்தியது ட்ரையம்ப்

24th May 2022 11:59 PM

ADVERTISEMENT

 

மும்பை: பிரிட்டனைச் சோ்ந்த பிரிமியம் வகை மோட்டாா் சைக்கிள் நிறுவனமான ட்ரையம்ப், இந்தியாவில் புத்தம் புதிய டைகா் 1200 ரக மோட்டாா் சைக்கிளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

டைகா் 1200 ரக மோட்டாா் சைக்கிளின் 4 புத்தம் புதிய ரகங்கள் இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் காட்சியக விலைகள் ரூ.19.19 லட்சத்திலிருந்து தொடங்குகிறது.

ADVERTISEMENT

ஜிடி புரோ மற்றும் ராலி புரோ, இடையில் எரிபொருள் நிரப்பாமல் நீண்ட தொலைவு செல்லக்கூடிய ஜிடி எஸ்ப்ளோரா், ராலி எக்ஸ்ப்ளோரா் ஆகிய ரகங்களில் டைகா் 1200 மோட்டாா் சைக்கிகள் சந்தையில் கிடைக்கும்.

தற்போது டைகா் வரிசை மோட்டாா் சைக்கிள்களில் ஸ்போா்ட் 660, 850 ஸ்போா்ட், 900 ஜிடி, 900 ராலி, 900 ராலி புரோ, 1200 ஜிடி புரோ, 1200 ராலி புரோ, 1200 ஜிடி எக்ஸ்ப்ளோரா், 1200 ராலி எக்ஸ்ப்ளோரா் ஆகியவை இடம் பெற்றுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT