வர்த்தகம்

தேயிலை ஏற்றுமதி 18.43 கோடி கிலோ

12th May 2022 12:21 AM

ADVERTISEMENT

கடந்த நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நாட்டின் தேயிலை ஏற்றுமதி 18.43 கோடி கிலோவாக இருந்தது.

இதுகுறித்து தேயிலை வாரியத்தின் புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2021-22-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான முதல் ஒன்பது மாதங்களில் 18.43 கோடி கிலோ தேயிலையை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஏற்றுமதியான 18.89 கோடி கிலோ தேயிலையுடன் ஒப்பிடும்போது 2.4 சதவீதம் குறைவாகும்.

மதிப்பீட்டு காலத்தில் தேயிலை ஏற்றுமதி அளவின் அடிப்படையில் குறைந்துள்ள நிலையிலும், மதிப்பின் அடிப்படையில் ரூ.4,933 கோடியிலிருந்து ரூ.4,956 கோடியாக சற்று ஏற்றம் கண்டுள்ளது.

ADVERTISEMENT

ரஷியா, உக்ரைன், காமன்வெல்த் நாடுகள் இந்தியாவிலிருந்து அதிகளவாக 4.11 கோடி கிலோ தேயிலை இறக்குமதி செய்துள்ளன. எனினும், இது முந்தைய 2020-21 நிதியாண்டின் முதல் ஒன்பது மாத கால இறக்குமதி அளவான4.62 கோடி கிலோ தேயிலையுடன் ஒப்பிடும்போது குறைவான அளவேயாகும்.

குறிப்பாக, ரஷியா 3.18 கோடி கிலோ, ஈரான் 2.72 கோடி கிலோ தேயிலையை இறக்குமதி செய்துள்ளது. அமெரிக்காவின் இந்திய தேயிலை இறக்குமதி 1.08 கோடி கிலோவாக இருந்தது.

மேலும், இந்தியாவிலிருந்து சீனா இறக்குமதி செய்யும் தேயிலையின் அளவு 1.12 கோடி கிலோவிலிருந்து 43 லட்சம் கிலோவாக கணிசமாக சரிவடைந்ததாக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் நாடுகள்,

Tags : Tea exports
ADVERTISEMENT
ADVERTISEMENT