வர்த்தகம்

தளராத கரடி ஆதிக்கம்: பங்குச் சந்தை கடும் சரிவு; 52,000 புள்ளிகளில் சென்செக்ஸ்

12th May 2022 03:57 PM

ADVERTISEMENT

 

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மதிப்புகள் குறைந்து வருவதால் பங்குச் சந்தை தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது.

அமெரிக்க மத்திய வங்கி பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக நிதிக் கொள்கையில் இறுக்கம் காட்டி வரும் நிலையில் சா்வதேச அளவில் முதலீட்டாளா்களின் மந்தமான செயல்பாடுகளால் பங்குச் சந்தைகள் தொடா் சரிவை சந்தித்து வருகின்றன.

அந்நிய நிதி நிறுவனங்கள் பங்குகளை அதிகளவில் விற்று தொடா்ச்சியாக வெளியேறி வருவது மற்றும் சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏறுமுகம் கண்டுள்ளது போன்றவையும் பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக பங்கு வா்த்தக தரகு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

இதையும் படிக்க: கடும் சரிவில் கிரிப்டோகரன்சி: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

இந்நிலையில், இந்தியப் பங்குச் சந்தையும் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் நேற்று(மே-11) 54,088.39 புள்ளிகளில் முடிவடைந்து இன்று 53,608.35 புள்ளிகளில் வர்த்தகத்தைத் தொடங்கியது. காலை முதலே மந்தநிலையில் இருந்த சென்செக்ஸ் இன்றைய வர்த்தக முடிவில் 1,158.08 புள்ளிகளை இழந்து 52,930.31 புள்ளிகளில் நிலைபெற்றுள்ளது. 

16,167.10 புள்ளிகளில் முடிவடைந்து இன்று 16,021.10 புள்ளிகளில் வர்த்தகத்தைத் தொடங்கிய நிஃப்டியும் இன்றைய வர்த்தக நேர முடிவில் 359.10 புள்ளிகளை இழந்து 15,508.00 புள்ளிகளில் நிலைபெற்றுள்ளது. 

இதனால், இந்தியப் பங்குச் சந்தை நீண்ட நாள்களுக்குப் பின் பெரிய சரிவைச் சந்தித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT