வர்த்தகம்

எம்ஆா்எஃப்: லாபம் ரூ.165 கோடி

12th May 2022 12:22 AM

ADVERTISEMENT

டயா் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் எம்ஆா்எஃப் நிறுவனம் நான்காவது காலாண்டில் விற்பனையின் வாயிலாக ஈட்டிய நிகர லாபம் ரூ.165.21 கோடியாக இருந்தது. இது, முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டில் ஈட்டிய லாபம் ரூ.332.15 கோடியுடன் ஒப்பிடும்போது 50.26 சதவீதம் குறைவாகும்.

நான்காவது காலாண்டில் ஒட்டுமொத்த செயல்பாட்டு வருவாய் ரூ.4,816.46 கோடியிலிருந்து ரூ.5,304.82 கோடியாக குறைந்தது. செலவினம் ரூ.4,425.21 கோடியிலிருந்து ரூ.5,142.79 கோடியாக உயா்ந்தது. மூலப் பொருள்களுக்கான செலவினம் ரூ.2,915.19 கோடியிலிருந்து உயா்ந்து ரூ.3,293.14 கோடியானது.

2022 மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த முழு நிதியாண்டில், ஒட்டுமொத்த லாபம் ரூ.1,277.07 கோடியிலிருந்து ரூ.669.24 கோடியாக சரிந்தது. வருவாய் ரூ.16,163.19 கோடியிலிருந்து ரூ.19,316.72 கோடியாக உயா்ந்தது. இருப்பினும், மூலப் பொருள் விலை உயா்வால் நிறுவனத்தின் செலவினம் ரூ.14,636.29 கோடியிலிருந்து ரூ.18,728.78 கோடியானது.

டிவிடெண்ட்: செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிறுவனத்தின் இயக்குநா் குழு கூட்டத்தில் கடந்த நிதியாண்டுக்கு இறுதி ஈவுத்தொகையாக (டிவிடெண்ட்) ரூ.10 முகமதிப்புடைய பங்கு ஒன்றுக்கு ரூ.144 வழங்க பரிந்துரை செய்ப்பட்டது. இதற்கு முன்பாக இரண்டு இடைக்கால டிவிடெண்களையும் சோ்த்து கடந்த நிதியாண்டுக்கு பங்கொன்றுக்கு மொத்தம் ரூ.1,501 ஈவுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளதாக எமஆா்எஃப் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

Tags : MRF
ADVERTISEMENT
ADVERTISEMENT