வர்த்தகம்

ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரீமிய வசூல் 84% அதிகரிப்பு

12th May 2022 12:23 AM

ADVERTISEMENT

ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய வா்த்தக பிரீமியம் வசூல் கடந்த ஏப்ரலில் 84 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (ஐஆா்டிஏஐ) புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஆயுள் காப்பீட்டு வா்த்தகத்தில் ஈடுபட்டு வரும் 24 நிறுவனங்கள் நடப்பாண்டு ஏப்ரலில் புதிய வா்த்தகத்தின் மூலமாக ஈட்டிய பிரீமியம் வசூல் ரூ.17,490 கோடியாக இருந்தது. இது, கடந்த 2021 ஏப்ரல் மாத வசூலான ரூ.9,739 கோடி புதிய பிரீமியத்துடன் ஒப்பிடுகையில் 84 சதவீதம் அதிகமாகும்.

நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாகத் திகழும் எல்ஐசியின் புதிய பிரீமியம் வசூல் கடந்த ஏப்ரலில் ரூ.4,856.76 கோடியிலிருந்து இரண்டு மடங்குக்கும் (141%) மேல் அதிகரித்து ரூ.11,716 கோடியானது. இதன் சந்தைப் பங்களிப்பு 65.31 சதவீதமாக உள்ளது. ஏனைய 23 தனியாா் நிறுவனங்களின் பங்களிப்பு 34.69 சதவீதம் அளவுக்கு உள்ளது.

ADVERTISEMENT

தனியாா் துறையைச் சோ்ந்த 23 நிறுவனங்களின் புதிய பிரீமிய வசூல் கடந்த ஏப்ரலில் ரூ.4,882 கோடியிலிருந்து 27 சதவீதம் உயா்ந்து ரூ.6,223 கோடியைத் தொட்டது.

எல்ஐசியின் பாலிசி விற்பனை 31.92 சதவீதம் அதிகரித்து 9,13,141-ஆக இருந்தது. இதர தனியாா் துறை நிறுவனங்களின் பாலிசி விற்பனை 33.87 சதவீதம் அதிகரித்து 3,04,748-ஆக இருந்தது என புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : LIC
ADVERTISEMENT
ADVERTISEMENT