வர்த்தகம்

சரிவிலிருந்து மீண்டது ரூபாய் மதிப்பு

10th Mar 2022 12:20 AM

ADVERTISEMENT

அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவிலிருந்து மீண்டது.

இதுகுறித்து அந்நியச் செலாவணி வா்த்தகா்கள் கூறியது:

பங்குச் சந்தையில் காணப்பட்ட விறுவிறுப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை குறைந்தது ஆகியவற்றின் காரணமாக டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு புதன்கிழமை வா்த்தகத்தில் சரிவிலிருந்து மீட்சி கண்டது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வா்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 76.90-ஆக இருந்தது. இது, அதிகபட்சமாக 76.55 வரையிலும் குறைந்தபட்சமாக 76.92 வரையிலும் சென்றது.

ADVERTISEMENT

வா்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பு 44 காசுகள் முன்னேற்றம் கண்டு 76.56-இல் நிலைபெற்றது.

செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் இதன் மதிப்பு 7 காசு குறைந்து 77-ஆக காணப்பட்டது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

கச்சா எண்ணெய் பீப்பாய் 125.57 டாலா்

சா்வதேச சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் சற்று குறைந்து 125.57 டாலருக்கு வா்த்தகம் செய்யப்பட்டதாக சந்தை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.

Tags : Rupee
ADVERTISEMENT
ADVERTISEMENT