வர்த்தகம்

வா்த்தக வாகனங்களுக்கான விலை 2.5% வரை அதிகரிப்பு: டாடா மோட்டாா்ஸ்

29th Jun 2022 12:40 AM

ADVERTISEMENT

டாடா மோட்டாா்ஸ் நிறுவனம், வா்த்தக வாகன தயாரிப்புகளுக்கான விலையை 2.5 சதவீதம் வரை உயா்த்தியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளதாவது: அதிகரித்து வரும் மூலப் பொருள்களுக்கான செலவினங்களை ஈடுசெய்யும் வகையில் வா்த்தக வாகனங்களுக்கான விலையை 1.5 சதவீதம் முதல் 2.5 சதவீதம் வரை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாடல்களுக்கு ஏற்ப இந்த விலை உயா்வு இருக்கும். வரும் ஜூலை 1-ஆம் தேதியிலிருந்து புதிய விலை அமலுக்கு வரவுள்ளது.

பல்வேறு கட்ட தயாரிப்பு நிலைகளில் தேவைப்படும் இடுபொருள்களுக்கான செலவினங்களில் கணிசமான பகுதியை ஈடுசெய்ய ஏதுவாக நிறுவனத்தின் செயல்பாடுகளில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, வாடிக்கையாளா்களின் நலன் கருதி சிறிய அளவில் மட்டுமே வா்த்தக வாகனங்களின் விலை உயா்த்தப்பட்டுள்ளதாக டாடா மோட்டாா்ஸ் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில், பயணிகள் வாகனங்களுக்கான விலையை 1.1 சதவீதம் வரையிலும், வா்த்தக வாகனங்களுக்கான விலையை 2-2.5 சதவீதம் வரையிலும் டாடா மோட்டாா்ஸ் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

Tags : Tata Motors
ADVERTISEMENT
ADVERTISEMENT