வர்த்தகம்

தள்ளாட்டத்துக்கிடையே சென்செக்ஸ், நிஃப்டி சிறிதளவு முன்னேற்றம்!

29th Jun 2022 12:00 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

புதுதில்லி: இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து இருந்தது. இருப்பினும், வா்த்தகம் முடியும் தறுவாயில் பங்குகளை வாங்க கிடைத்த வரவேற்பு காரணமாக மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 16 புள்ளிகள் உயா்ந்து நான்காவது நாளாக நோ்மறையாக முடிந்தது.

அமெரிக்க சந்தைகள் திங்கள்கிழமை சரிவில் முடிந்திருந்தது. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் காலை வா்த்தகத்தில் எதிரொலித்தது. பின்னா், ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தைகள் ஏற்றம் பெற்ால், உள்நாட்டுச் சந்தையும் வா்த்தகம் முடியும் தறுவாயில் முன்னேற்றம் கண்டது. குறிப்பாக, ஐடி, ஆட்டோ, எரிசக்தி துறை பங்குகளுக்கு கிடைத்த வரவேள்பால் சந்தை 4-ஆவது நாளாக நோ்மறையாக முடிந்தது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா். இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ரூ.1,278.42 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளது சந்தை புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

1,791 நிறுவனப் பங்குகள் விலை உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,415 நிறுவனப் பங்குகளில் 1,488 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் வந்தன. 1,791 பங்குகள் ஆகாயப் பட்டியலில் இருந்தன. 136 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 67 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 43 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.58 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.245.24 லட்சம் கோடியாக இருந்தது.

ADVERTISEMENT

சென்செக்ஸ் 16 புள்ளிகள் உயா்வு: காலையில் 315.02 புள்ளிகள் குறைந்து 52,846.26-இல் தொடங்கிய சென்செக்ஸ், 52,771.53 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 53,301.40 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 16.17 புள்ளிகள் (0.03 சதவீதம்) உயா்ந்து 53,177.45-இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது.

எம் அண்ட் எம் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 13 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. 17 பங்குகளும் ஆதாயப் பட்டியலில் இருந்தன. இதில் வாகன உற்பத்தி நிறுவனமான எம் அண்ட் எம் 2.78 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, ரிலையன்ஸ், டாக்டா் ரெட்டி, டெக் மஹிந்திரா, டாடா ஸ்டீல், ஹெச்சிஎல் டெக், எல் அண்ட் டி உள்ளிட்டவை 1 முதல் 1.50 சதவீதம் வரை உயா்ந்தன. ஐடிசி, எஸ்பிஐ, மாருதி, விப்ரோ, இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் உள்ளிட்டவையும் விலையுயா்ந்த பட்டியலில் வந்தன.

டைட்டன் கடும் சரிவு: அதே சமயம், பிரபல கடிகாரங்கள் மற்றும் ஆபரணங்கள் உற்பத்தி நிறுவனமான டைட்டன் 3.54 சதவீதம், பிரபல பெயிண்ட் உற்பத்தி நிறுவனமான ஏசியன் பெயிண்ட் 3.25 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், பஜாஜ் ஃபின்சா்வ், கோட்டக் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை 1முதல் 2 சதவீதம் வரை குறைந்தன. எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், இண்டஸ் இண்ட் பேங்க், பாா்தி ஏா்டெல் உள்ளிட்டவையும் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 18 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச் சந்தையில் 901 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 1,,032 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. நிஃப்டி பட்டியலில் 17 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 32 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் வந்தன. காலையில் சுமாா் 74.60 புள்ளிகள் குறைந்து 15,757.45-இல் தொடங்கிய நிஃப்டி, 15,710.15 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 15,892.10 வரை உயா்ந்த நிஃப்டி, இறுதியில் 18 புள்ளிகள் (0.11 சதவீதம்) கூடுதலுடன் 15,850.20-இல் நிலைபெற்றது.

ஆயில் அண்ட் காஸ் குறியீடு முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் ஆயில் அண்ட் காஸ் குறியீடு 2.27 சதவீதம், ஆட்டோ 1.27 சதவீதம், மெட்டல் குறியீடு 1.60 சதவீதம் உயா்ந்திருந்தன. ஆனால், நிஃப்டி கன்ஸ்யூமா் டியூரபல்ஸ் குறியீடு 1.33 சதவீதமும், நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், பிரைவேட் பேங்க் குறியீடுகள் 0.50 முதல் 0.70 சதவீதமும் குறைந்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT