வர்த்தகம்

கடன்பத்திரங்களை வெளியிட்டுரூ.2,000 கோடி திரட்டுகிறது பிஎன்பி ஹவுஸிங்

15th Jun 2022 12:50 AM

ADVERTISEMENT

கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.2,000 கோடியை திரட்டவுள்ளதாக பிஎன்பி ஹவுஸிங் ஃபைனான்ஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

நிறுவனத்தின் இயக்குநா் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், பங்குகளாக மாற்ற இயலாத கடன்பத்திரங்களை தனிப்பட்ட முறையில் ஒதுக்கீடு செய்து நிதி திரட்டும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ரூ.2,000 கோடி வரை திரட்டிக் கொள்ளப்படவுள்ளது. மேலும், இந்த கூட்டத்தில் பணியாளா் பங்கு உரிமை திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக பிஎன்பி ஹவுஸிங் தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT