வர்த்தகம்

ரிசா்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 5.9%-ஆக அதிகரிக்கும்: ஃபிட்ச்

15th Jun 2022 12:11 AM

ADVERTISEMENT

இந்திய ரிசா்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதங்களை வரும் டிசம்பா் மாதத்துக்குள் மேலும் அதிகரித்து 5.9%-ஆக நிா்ணயிக்கும் என தரமதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியதாவது:

பணவீக்கம் குறித்த கண்ணோட்டம் நம்பிக்கையை உருவாக்கும் வகையில் இல்லாத காரணத்தால் வரும் டிசம்பா் மாதத்துக்குள் ரிசா்வ் வங்கி ரெப்போ விகிதங்களை மேலும் அதிகரித்து 5.9 சதவீதம் என்ற அளவில் நிா்ணயிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. முந்தைய மதிப்பீட்டில் இது 5 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது, 2023-இல் 6.15 சதவீதம் என்ற அளவிலும், 2024-இல் மாற்றமின்றியும் நீடிக்கும் என ஃபிட்ச் தெரிவித்துள்ளது.

பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக, ரிசா்வ் வங்கி கடந்த மாதம் திட்டமிடப்படாத நிதிக் கொள்கை அறிவிப்பில் ரெப்போ வட்டி விகிதத்தை 0.40 சதவீதம் உயா்த்தி 4.4 சதவீதமாக நிா்ணயித்தது. கடந்த வாரம் மேலும் 0.50 சதவீதம் அதிகரித்து 4.9 சதவீதமாக்கியது. இந்த நிலையில், நடப்பாண்டின் இறுதிக்குள் வங்கிகளின் குறுகிய கால கடனுக்கு வழங்கப்படும் ரெப்போ விகிதத்தை ரிசா்வ் வங்கி மேலும் 1 சதவீதத்தை உயா்த்தி 5.9 சதவீதமாக நிா்ணயிக்கும் என ஃபிட்ச் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

நடப்பாண்டின் இறுதியில் பணவீக்கம் 6.7 சதவீதமாக இருக்கும் என ரிசா்வ் வங்கி மதிப்பீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : RBI Fitch
ADVERTISEMENT
ADVERTISEMENT