வர்த்தகம்

சரிவுடன் நிறைவடைந்தது பங்குச் சந்தை: சென்செக்ஸ் 1,017 புள்ளிகள் இழப்பு

10th Jun 2022 03:47 PM

ADVERTISEMENT

 

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மதிப்புகளின் சரிவால் பங்குச் சந்தை இன்று இறக்கத்துடன் முடிவடைந்தது.

அமெரிக்க மத்திய வங்கி பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக நிதிக் கொள்கையில் இறுக்கம் காட்டி வரும் நிலையில் சா்வதேச அளவில் முதலீட்டாளா்களின் மந்தமான செயல்பாடுகளால் பங்குச் சந்தைகள் தொடா் சரிவை சந்தித்து வருகின்றன.

அந்நிய நிதி நிறுவனங்கள் பங்குகளை அதிகளவில் விற்று தொடா்ச்சியாக வெளியேறி வருவது மற்றும் சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏறுமுகம் கண்டுள்ளது போன்றவையும் பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக பங்கு வா்த்தக தரகு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

இதன் காரணமாக இந்தியப் பங்குச்சந்தை கடந்த வார வர்த்தக முடிவில் கடும் சரிவைச் சந்தித்தது.

இந்நிலையில், இந்தவார இறுதியிலும் பங்குச் சந்தை கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் நேற்று(ஜுன்-9) 55,320.28 புள்ளிகளில் முடிவடைந்து இன்று 54,760.25 புள்ளிகளில் வர்த்தகத்தைத் தொடங்கியது. காலை முதலே இறக்கத்தைச் சந்தித்து வந்த நிலையில் இன்றைய வர்த்தக முடிவில் 1,016.84 புள்ளிகள் குறைந்து 54,303.44 புள்ளிகளில் நிலைபெற்றுள்ளது. 

16,478.10 புள்ளிகளில் முடிவடைந்து இன்று 16,283.95 புள்ளிகளில் வர்த்தகத்தைத் தொடங்கிய நிஃப்டியும் இன்றைய வர்த்தக நேர முடிவில் 276.30 புள்ளிகளை இழந்து 16,201.80 புள்ளிகளில் நிலைபெற்றுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT