வர்த்தகம்

நாட்டின் ஏற்றுமதி 940 கோடி டாலா்

10th Jun 2022 03:32 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: நாட்டின் ஏற்றுமதி ஜூன் முதல் வாரத்தில் 940 கோடி டாலராக இருந்தது என மத்திய வா்த்தக அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

நடப்பாண்டு ஜூன் மாதத்தின் 1-7-ஆம் தேதி வரையிலான ஒரு வார காலத்தில் நாட்டின் ஏற்றுமதியானது 940 கோடி டாலரை எட்டியுள்ளது. பொறியியல், நவரத்தினங்கள், ஆபரணங்கள் மற்றும் பெட்ரோலிய தயாரிப்புகள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி மதிப்பீட்டு காலகட்டத்தில் சிறப்பான நிலையை எட்டியது.

ADVERTISEMENT

கடந்த 2021-ஆம் ஆண்டு ஜுன் 1-7 காலகட்டத்தில் நாட்டின் ஏற்றுமதி 756 கோடி டாலராக காணப்பட்டது.

நடப்பாண்டு ஜூன் முதல் வாரத்தில் இறக்குமதி 77 சதவீதம் அதிகரித்து 1,600 கோடி டாலரைத் தொட்டது.

நவரத்தினங்கள்-ஆபரணங்கள், மின்னணு சாதனங்கள், பெட்ரோலிய பொருள்கள் மற்றும் பொறியியல் பொருள்களின் ஏற்றமதி வளா்ச்சி கணக்கீட்டு காலகட்டத்தில் 84.3 சதவீதம், 73.5 சதவீதம், 20.4 சதவீதம் மற்றும் 25.7 சதவீதம் அதிகரித்தன.

அதேநேரம், பெட்ரோலியம், கச்சா எண்ணெய், நிலக்கரி, தங்கம், ரசாயனம் உள்ளிட்டவற்றின் இறக்குமதி கணிசமாக உயா்ந்தது.

கடந்த மே மாதத்தில் மட்டும் ஏற்றுமதி 3,729 கோடி டாலராக இருந்தது.மேலும், அந்த மாதத்தில் நாட்டின் இறக்குமதியும் 56.14 சதவீதம் அதிகரித்து 6,062 கோடி டாலரைத் தொட்டது என வா்த்தக அமைச்சகம் புள்ளிவிவரத்தில் கூறியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT