வர்த்தகம்

பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா: லாபம் ரூ.1,152 கோடி

2nd Jun 2022 04:02 AM

ADVERTISEMENT

பொதுத் துறையைச் சேர்ந்த பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா கடந்த முழு நிதியாண்டில் ரூ.1,152 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.
 இதுகுறித்து அந்த வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஏ.எஸ். ராஜீவ் கூறியது:
 வங்கி, கடந்த நிதியாண்டில் கடன் வழங்கல் மற்றும் டெபாசிட் திரட்டல் நடவடிக்கைகளில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அந்த வகையில், 2022 மார்ச் இறுதி நிலவரப்படி வங்கி வழங்கிய மொத்த கடன் 26 சதவீதம் அதிகரித்து ரூ.1,35,240 கோடியை எட்டியுள்ளது. திரட்டப்பட்ட டெபாசிட் 16.26 சதவீதம் உயர்ந்து ரூ.2,02,294 கோடியாக இருந்தது.
 கடந்த நிதியாண்டில் வங்கியின் மொத்த வர்த்தகம் 20 சதவீதம் அதிகரித்து ரூ.3,37,534 கோடியானது. நிகர லாபம் ரூ.550 கோடியிலிருந்து வளர்ச்சி கண்டு ரூ.1,152 கோடியைத் தொட்டது.
 மொத்த வாராக் கடன் 7.23%-லிருந்து 3.94%-ஆகவும், நிகர வாராக் கடன் 2.48%-லிருந்து 0.97%-ஆகவும் குறைந்துள்ளன.
 நடப்பு நிதியாண்டில் வங்கியின் நிகர லாபத்தை 25-30 சதவீதம் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT